யானை தாக்கி விவசாயி பலி| Dinamalar

யானை தாக்கி விவசாயி பலி

Added : ஜன 15, 2022 | |
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, சோளப்பயிருக்கு காவல் காக்க சென்ற விவசாயி, யானை தாக்கியதில் பலியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் ஊராட்சி பீக்கிரிபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன், 74; செல்லப்பன் தொட்டி பகுதியில் இவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளார். இரவில் வன விலங்குகள் தோட்டத்தில்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, சோளப்பயிருக்கு காவல் காக்க சென்ற விவசாயி, யானை தாக்கியதில் பலியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் ஊராட்சி பீக்கிரிபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன், 74; செல்லப்பன் தொட்டி பகுதியில் இவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளார். இரவில் வன விலங்குகள் தோட்டத்தில் புகுந்து சேதம் செய்வதால், பயிருக்கு காவல் காப்பது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்கு காவல் பணிக்கு சென்றார். இரவு, 11:௦௦ மணியளவில் ஒற்றை யானை சோளக்காட்டில் புகுந்தது. யானை மிதித்ததில் குருநாதன் பலியானார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X