சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் இரட்டிப்பாகும் என ரூ.1.09 லட்சம் மோசடி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
சிவகங்கை: 'ஆன்லைன்' வர்த்தகத்தில் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும் என்று வந்த போலி இணையதள முகவரியை நம்பி 1.09 லட்சம் ரூபாய் இழந்த பி.இ., பட்டதாரி பெண், சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.சிவகங்கை, காமராஜர் காலனி சஞ்சய் நகரைச் சேர்ந்த பூமிநாதன் மகள் திவ்யா, 26; பி.இ., முடித்து சென்னையில் ஐ.டி., துறையில் பணிபுரிகிறார். தற்போது, ஊரடங்கு காரணமாக சிவகங்கையில் வீட்டில்

சிவகங்கை: 'ஆன்லைன்' வர்த்தகத்தில் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும் என்று வந்த போலி இணையதள முகவரியை நம்பி 1.09 லட்சம் ரூபாய் இழந்த பி.இ., பட்டதாரி பெண், சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

சிவகங்கை, காமராஜர் காலனி சஞ்சய் நகரைச் சேர்ந்த பூமிநாதன் மகள் திவ்யா, 26; பி.இ., முடித்து சென்னையில் ஐ.டி., துறையில் பணிபுரிகிறார். தற்போது, ஊரடங்கு காரணமாக சிவகங்கையில் வீட்டில் இருந்து பணி செய்கிறார். சுரங்க நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு தொகை பெறலாம் என வந்த போலி இணையதள முகவரியை நம்பி, 2021 டிச., 28ம் தேதியில் இருந்து ஜன., 8ம் தேதி வரை ஆன்லைன் மூலம் 1.09 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். பணம் இரட்டிப்பு ஆகவே இல்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரிக்கிறார்.

தம்பதி மீது வழக்கு

சேலம், அயோத்தியாப்பட்டணம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த நவீன் மனைவி சரண்யா, 29. இவர் பணிபுரியும் தனியார் பள்ளியில், இருதயராஜ் மனைவி ஹெலன் பிரியா, 26, என்பவர் பணிபுரிகிறார்.இருவரும் சேர்ந்து, 'அபக்ஸ் வேப்' சர்வீஸ் நிறுவனத்தில், ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். சரண்யா, 6 லட்சத்து, 80 ஆயிரத்து, 912 ரூபாயை பரிமாற்றம் செய்த நிலையில், அதை, 2020 செப்., 2ல், இருதயராஜ் மோசடி செய்து எடுத்துக் கொண்டார்.

இதற்கு, அவரது மனைவி ஹெலன் பிரியா உடந்தையாக இருந்தார். சரண்யா, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண், 4ல் வழக்கு தொடர்ந்தார்.விசாரித்த நீதிமன்றம், மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது வழக்கு பதிந்து விசாரிக்க, வீராணம் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி, இருவர் மீதும் மோசடி வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X