பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் வாசலில் நின்று வழிபாடு

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கோபி: கோபியில், கோவில்களின் நடை மூடியதால், தை பொங்கல் நாளில், வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு, அரசு தடை விதித்துள்ளது. இதன்படி கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் நடை நேற்று மூடப்பட்டது. இதனால் பொங்கல் நாளான நேற்று,

கோபி: கோபியில், கோவில்களின் நடை மூடியதால், தை பொங்கல் நாளில், வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு, அரசு தடை விதித்துள்ளது. இதன்படி கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் நடை நேற்று மூடப்பட்டது. இதனால் பொங்கல் நாளான நேற்று, கோவிலுக்கு வந்த பக்தர்கள், வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன், பச்சமலை மற்றும் முருகன் கோவில் நடைகளும் மூடப்பட்டன. கோபி, வேலுமணி நகர், சக்தி விநாயகர் கோவிலில், தை பொங்கலையொட்டி, சிறப்பு அபிஷேகம் செய்து, கரும்புகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X