ஈரோடு: ரிங் ரோட்டில், திண்டல் முதல் கனி ராவுத்தர் குளம் வரையிலான பகுதியில், வீடுகள் அதிகரித்ததால், மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை முதல், ஈரோடு - கரூர் சாலையில் இணைந்து, ஆணைக்கல் பாளையம், ரங்கம்பாளையம் வழியாக பெருந்துறை சாலை ஈரோடு கேன்சர் சென்டர் அருகே இணையும் வகையில் 'ரிங் ரோடு' (சுற்று வட்டச்சாலை) திட்டமிட்டு, பணியை துவக்கினர். சில இடங்களில் நில உரிமைதாரர்கள் நீதிமன்றம் சென்றதால், வழக்கு நிறைவு பெற்று, 2020ல் திட்டப்பணி முடிக்கப்பட்டது. இதன் இணைப்பாக, பெருந்துறை சாலை, திண்டல் வேளாளர் கல்லூரிக்கு அருகே உள்ள சாலையில் துவங்கி நசியனூர் சாலை இணைத்தும், வில்லரசம்பட்டி நான்கு ரோடு வழியாக ஈரோட்டுக்குள் வராமல் சத்தி சாலையில் கனி ராவுத்தர் குளம் அருகே வரும் வகையில் மற்றொரு திட்டத்தையும் முடிவு செய்தனர். ஆனால், கடந்த ஆட்சி யில் இத்திட்டம் கிடப்புக்கு போனது. தற்போது, அத்திட்டத்தை மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: கரூர் சாலையில் இருந்து ரிங்ரோடு பணி முடிந்து விட்டது. திண்டலில் இருந்து கனி ராவுத்தர் குளம் வரை வில்லரசம்பட்டி சாலை வழியாக கொண்டு வரும்படி முன்பு திட்டமிடப்பட்டது. தற்போது அச்சாலையில் ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள் அமைந்துவிட்டன. முன்பு திட்டமிட்டபடி சுற்று வட்டச்சாலையை கொண்டு வந்தால், அதிக அளவில் நிலம் கையகப்படுத்துதல், பிற பாதிப்பு ஏற்படும். எனவே திண்டலில் இருந்து செல்லும் ரிங்ரோடு சாலையை, வில்லரசம்பட்டி சாலையில் வீடுகள் இல்லாத, மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் மாற்று திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுபற்றி தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement