ஈரோடு: வார விடுமுறை எடுக்க, அரசு உத்தரவு பிறப்பிக்காததால், 20 ஆயிரம் எஸ்.எஸ்.ஐ.,க்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழக போலீசில், 25 ஆண்டு பணியாற்றிய போலீசாருக்கு, எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது, 20 ஆயிரம் பேர் எஸ்.எஸ்.ஐ.,க்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது வார விடுமுறை குறித்து, எதுவும் தெரிவிக்காமல் அரசு உத்தரவிட்டிருப்பது ஏமாற்றம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி எஸ்.எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது: அரசு சமீபத்தில் வெளியிட்ட ஆணையில், இரண்டாம் நிலை காவலர் முதல் ஏட்டு வரை, வாரந்தோறும் வார விடுப்பு அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்.எஸ்.ஐ.,க்கள் சேர்க்கப்படவில்லை. கொரோனா காலத்தில் அ.தி.மு.க., ஆட்சியின்போது, எஸ்.எஸ்.ஐ.,க்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட்டது. தற்போது புது உத்தரவில் கட்டாகி உள்ளது. தற்போதைய எஸ்.எஸ்.ஐ.,க்கள் பலரும், 50 வயதை கடந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதை உள்ளது. இது தவிர குடும்ப பிரச்னை, குடும்பத்தினர் நலன் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. ஆனால் அவர்களுக்கு வார விடுப்பு வழங்காமல், இளம் வயது போலீசாருக்கு விடுமுறையை உறுதி செய்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில், 25 ஆண்டுகள் பணியாற்றிய போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நடைமுறையும் கடைபிடிக்கப்படுவதில்லை. எஸ்.எஸ்.ஐ.,க்களை அலங்கார பொம்மைகளாக வைத்துள்ளனர். அவர்களுக்கு அதிகாரமும் வழங்கப்படுவதில்லை. எஸ்.எஸ்.ஐ.,க்களின் வார விடுமுறை குறித்து, அரசின் கவனத்துக்கு உயர் அதிகாரிகள் கொண்டு செல்லவில்லை. அலங்கார பொம்மைகளான எஸ்.எஸ்.ஐ.,க்களுக்கு வார விடுமுறை அளிப்பதால் என்ன பிரச்னை வந்து விட போகிறது. அதிகளவில் இருப்பதாக நினைத்து, வார விடுமுறை தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement