சத்தியமங்கலம்: தாளவாடி மலையில் ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. மாடுகள் வளர்த்து வருகிறார். மறையன் குட்டை என்னுமிடத்தில், சில நாட்களுக்கு முன் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலையில் வழக்கம்போல் திரும்ப வேண்டிய ஒரு மாடு வரவில்லை. நேற்று முன்தினம் காலை மாட்டை தேடிச்சென்றபோது, வாய் பகுதியில் சதை பிய்ந்து தொங்கியபடி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அவுட்டு காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை கடித்ததே இதற்கு காரணம் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் மாடு இறந்து விட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தாளவாடியில் விலங்குகளை வேட்டையாடும் கும்பல், வனப்பகுதியில் அவுட்டுகாயை வீசி செல்கின்றனர். இது தெரியாமல் கால்நடைகள் கடிக்கும்போது, வெடித்து பலியாகும் சம்பவம் நடக்கிறது. வேட்டை கும்பலை வனத்துறையினர் பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE