கீழ்பவானி வாய்க்காலில் குளித்த பக்தர் மாயமானதால் அதிர்ச்சி| Dinamalar

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த பக்தர் மாயமானதால் அதிர்ச்சி

Added : ஜன 15, 2022
பவானி: சித்தோடு அருகே, கீழ்பவானி வாய்க்காலில் குளித்த, ஆந்திர மாநில பக்தர்கள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். சித்தோடு அருகே நசியனூர் பெரிய வாய்க்கால் மேட்டில், கீழ்பவானி வாய்க்காலில், நேற்று காலை, 9:00 மணியளவில், சபரிமலைக்கு செல்லும், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு பக்தர்கள் குளித்தனர். இதில் ராமாராவ், 26, என்பவர் தண்ணீரில் அடித்துச்

பவானி: சித்தோடு அருகே, கீழ்பவானி வாய்க்காலில் குளித்த, ஆந்திர மாநில பக்தர்கள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். சித்தோடு அருகே நசியனூர் பெரிய வாய்க்கால் மேட்டில், கீழ்பவானி வாய்க்காலில், நேற்று காலை, 9:00 மணியளவில், சபரிமலைக்கு செல்லும், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு பக்தர்கள் குளித்தனர். இதில் ராமாராவ், 26, என்பவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார், சக பக்தர்கள் மூவர், இவர்கள் வந்த காரின் டிரைவர் இதைப்பார்த்து கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் சித்தோடு போலீசாருக்கு தகவல் தந்தனர். பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள், மீனவர்களுடன், சித்தோடு போலீசார் சென்றனர். அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை, ?:?? மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று தேடும் பணி நடக்கலாம் என்று தெரிகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X