வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜன.,16 தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கடைபிடிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் வாழ்த்துகள். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான கொள்கைகளில் அரசு பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

இனி வரும் காலங்களில் ஜன.,16 தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கடைபிடிக்கப்படும். மக்களின் ஆற்றலை தேசம் அங்கிகரித்துள்ளது.ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், புதிய இந்தியாவின் முதுகெலும்பாக மாறி உள்ளது. இந்தியா 100 ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, ஸ்டார்ட் அப்கள் முக்கிய பங்கு வகிக்கும். நாட்டின் புதிய கண்டுபிடிப்பாளர்கள், சர்வதேச அளவில் தேசத்தை மிளிர செய்கின்றனர். இந்த தசாப்தம் இந்தியாவின் தசாப்தமாக மாறியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE