குடிநீர் கேட்டு சாலை மறியல்| Dinamalar

குடிநீர் கேட்டு சாலை மறியல்

Added : ஜன 15, 2022 | |
வாழப்பாடி: வாழப்பாடி, துக்கியாம்பாளையத்தில், 20 நாளுக்கு மேலாக குடிநீர் வினியோகிக்கப்பட இல்லை. இதனால், அப்பகுதியில் உள்ள, 100க்கும் மேற்பட்டோர் சிரமத்துக்குள்ளாகினர். சிலர், வாகனங்கள் மூலம், 2 கி.மீ., சென்று குடங்களில் எடுத்து வந்தனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் பேளூர் -

வாழப்பாடி: வாழப்பாடி, துக்கியாம்பாளையத்தில், 20 நாளுக்கு மேலாக குடிநீர் வினியோகிக்கப்பட இல்லை. இதனால், அப்பகுதியில் உள்ள, 100க்கும் மேற்பட்டோர் சிரமத்துக்குள்ளாகினர். சிலர், வாகனங்கள் மூலம், 2 கி.மீ., சென்று குடங்களில் எடுத்து வந்தனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் பேளூர் - வாழப்பாடி நெடுஞ்சாலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாழப்பாடி போலீசார் பேச்சு நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால், மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X