பொது செய்தி

தமிழ்நாடு

இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை; முதல்வர் அறிவிப்பு

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசின் சார்பில், முல்லைப் பெரியார் அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் நிறுவப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது
John Pennycuick, Statue, TNGovt, England, இங்கிலாந்து, பென்னிகுயிக், சிலை, தமிழக அரசு, முதல்வர், ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழக அரசின் சார்பில், முல்லைப் பெரியார் அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் நிறுவப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, ‛கர்னல் ஜான் பென்னிகுயிக்' புதிய சிலையை, அவரது பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவரது பிறந்தநாளான இன்று (ஜன.,15) அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


latest tamil news


அவரது சிலையை நிறுவ, அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலை பெற்றுள்ளார்கள். தென் மாவட்ட மக்களின் நீண்டகால தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு பெரும் போராட்டத்தில் பல்வேறு இன்னல்களை கடந்து கட்டப்பட்ட முல்லைப் பெரியாற்றின் மீதான தமிழகத்தின் உரிமையை எந்நாளும் விட்டுக் கொடுக்காமல் காப்பதற்கு நமது அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்பதனையும் பென்னிகுயிக் பிறந்த நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
17-ஜன-202200:04:56 IST Report Abuse
Akash This will include Stalin's expenses for London trips
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
16-ஜன-202213:21:36 IST Report Abuse
Nellai tamilan சிலை வைக்கவும் சமாதி கட்டவும் மட்டுமே தெரிந்த ஒரு அரசு உண்டு என்றால் அது நம்ப விடியல் அரசு தான்.
Rate this:
Cancel
16-ஜன-202200:22:27 IST Report Abuse
Ragothaman Raghavan மக்களின் வரிப்பணத்தை வீண் செலவு செய்து அதை சாதனையாக சொல்லிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார் போலும். பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X