கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் போட்டி; பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: உ.பி., சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.உ.பி., சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.இந்நிலையில் டில்லியில் நிருபர்களை சந்தித்த உ.பி., மாநில பா.ஜ., பெறுப்பாளர்
gorakhpur, yogi, yogi adithyanath, bjp, up, uttarpradesh, assembly,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: உ.பி., சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

உ.பி., சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் டில்லியில் நிருபர்களை சந்தித்த உ.பி., மாநில பா.ஜ., பெறுப்பாளர் தர்மேந்திர பிரதான், உ.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.,வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில், முதல் கட்ட தேர்தல் நடக்கும் 58 தொகுதிகளில் 57 க்கும், இரண்டாவது கட்ட தேர்தல் நடக்கும் 55 தொகுதிகளில் 38 க்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதன்படி, தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியிலும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சிரத்து தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.


latest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newsஇன்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றவர்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் எஸ்சி/ எஸ்டி பிரிவினர் 60 சதவீதம் பேர் இடம்பெற்றனர். அவர்களில் 44 பேர் ஓபிசி பிரிவினர், 19 பேர் எஸ்சி/ எஸ்டி பிரிவினர் . இவர்களில் சிலர் பொதுத்தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர். 10 பெண்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
15-ஜன-202215:45:34 IST Report Abuse
 Muruga Vel ஆதித்யநாத் மதுராவில் போட்டியிட்டால் கிருஷ்ண ஜென்ம பூமி கோவிலும் பிருந்தாவனும் புதிய பொலிவு பெரும் ..அல்லது மோடி மதுராவில் போட்டியிட வேண்டும் ..ஸ்வாமி பிரசாத் மவுரியா BJP கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தாலும் அவர் மகள் சங்கமித்ரா BJP கட்சியில் MP ஆகவே இருக்கிறார் ..
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
15-ஜன-202215:02:50 IST Report Abuse
SUBBU தன் சொந்த காசை செலவழித்து பல போஸ்டர் டீமை உருவாக்கி அனைத்து ஊர் போஸ்டர்களிலும் மீசையை முறுக்கி pose கொடுக்கும் சரக்கு மிடுக்கு திருமா தன் அடிமைகளை இப்படி பொது தொகுதியில் நிற்க வைக்க தைரியம் இருக்கிறதா? அதே போல் திமுக அமைச்சரவையில் (காலங்காலமாக கட்டுமர ஆட்சியில் இருந்து ஆதி திராவிடர் நலத்துறை என்றால் கூப்பிடு தலித்தை என்பது தான் இதையெல்லாம் நினைத்தால் உனக்கெல்லாம் வெட்கமாக இல்லை) அங்கம் வகிக்கும் பட்டியல் இனத்தை சேர்ந்தவரான ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழியை நிதித் துறைக்கோ,அல்லது துரைமுருகன் வகிக்கும் கனிமவளத் துறைக்கோ அமைச்சராக்க வேண்டும் என சொல்ல உனக்கு திராணி இருக்கா? உனக்கு தெரிந்ததெல்லாம் சாப்டியா திருமா என்று கேட்டால் கூட சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூப்பாடு போடும் உனக்கு இதெல்லாம் புரியவா போகிறது.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜன-202214:12:06 IST Report Abuse
முக்கண் மைந்தன் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X