பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கு கிடைத்த விருதுடன் மக்கள் ஊர்வலம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளி, சேலம் மாவட்டத்தில், சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு, கலெக்டர் கார்மேகம், சமீபத்தில் விருது வழங்கினார். அப்பள்ளி மேலாண் குழுவினர், சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டதை, நேற்று விழாவாக கொண்டாடினர். இதனால், விருது வழங்கிய கேடயத்தை, 'சாரட்' வண்டியில் வைத்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மக்கள்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளி, சேலம் மாவட்டத்தில், சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு, கலெக்டர் கார்மேகம், சமீபத்தில் விருது வழங்கினார். அப்பள்ளி மேலாண் குழுவினர், சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டதை, நேற்று விழாவாக கொண்டாடினர். இதனால், விருது வழங்கிய கேடயத்தை, 'சாரட்' வண்டியில் வைத்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மக்கள் ஊர்வலமாக சென்றனர். ரேஷன் கடை அருகே தொடங்கிய ஊர்வலம், விநாயகர் காலனி, கட்டபுளியமரம், கட்டியப்பன் புதூர் வழியாக, முத்தானூரை அடைந்தது. வண்டி முன், பெற்றோர், மக்கள், பழத்தட்டுகள் ஏந்தி சென்றனர். விருது பெற காரணமான அப்பள்ளி ஆசிரியர் தெய்வநாயகம், தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன், ஆசிரியர்கள் ராஜா, கோமதிக்கு, கைக்கடிகாரம் பரிசாக வழங்கி, மக்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X