பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளி, சேலம் மாவட்டத்தில், சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு, கலெக்டர் கார்மேகம், சமீபத்தில் விருது வழங்கினார். அப்பள்ளி மேலாண் குழுவினர், சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டதை, நேற்று விழாவாக கொண்டாடினர். இதனால், விருது வழங்கிய கேடயத்தை, 'சாரட்' வண்டியில் வைத்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மக்கள் ஊர்வலமாக சென்றனர். ரேஷன் கடை அருகே தொடங்கிய ஊர்வலம், விநாயகர் காலனி, கட்டபுளியமரம், கட்டியப்பன் புதூர் வழியாக, முத்தானூரை அடைந்தது. வண்டி முன், பெற்றோர், மக்கள், பழத்தட்டுகள் ஏந்தி சென்றனர். விருது பெற காரணமான அப்பள்ளி ஆசிரியர் தெய்வநாயகம், தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன், ஆசிரியர்கள் ராஜா, கோமதிக்கு, கைக்கடிகாரம் பரிசாக வழங்கி, மக்கள் பாராட்டினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement