மேட்டூர் அரசு மருத்துவமனையில் அடிக்கடி பழுதாகும் சி.டி., ஸ்கேன்| Dinamalar

மேட்டூர் அரசு மருத்துவமனையில் அடிக்கடி பழுதாகும் சி.டி., ஸ்கேன்

Added : ஜன 15, 2022 | |
மேட்டூர்: மேட்டூர் அரசு மருத்துவமனையில், சி.டி., ஸ்கேன் இயந்திரம் அடிக்கடி பழுதாவதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மேட்டூரில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரம் பேர் வெளி நோயாளிகளாகவும், 200க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். சேலம் புறநகரில் பெரிதான மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு விழுப்புரம் அரசு

மேட்டூர்: மேட்டூர் அரசு மருத்துவமனையில், சி.டி., ஸ்கேன் இயந்திரம் அடிக்கடி பழுதாவதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மேட்டூரில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரம் பேர் வெளி நோயாளிகளாகவும், 200க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். சேலம் புறநகரில் பெரிதான மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து, 2017ல் பழைய சி.டி., ஸ்கேன் இயந்திரம் வழங்கப்பட்டது. அதில் தினமும், 30க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்கப்படுகிறது. அவ்வப்போது இயந்திரம் பழுதாகி விடுகிறது. இடைப்பாடி, ஓமலூர் அரசு மருத்துவமனையில் கூட நவீன ஸ்கேன் இயந்திரம் உள்ளது. மேட்டூரில் பழைய இயந்திரத்தில் எடுக்கப்படும் ஸ்கேன் அறிக்கை துல்லியமாக இல்லாததால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. நவீன சி.டி., ஸ்கேன் இயந்திரம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் நிறுவ மேட்டூர் சுற்றுப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து, மேட்டூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி கூறுகையில்,'' மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு நவீன சி.டி., ஸ்கேன் இயந்திரம் வழங்குமாறு ஏற்கனவே சுகாதாரத்துறையில் கேட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X