தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் விழா| Dinamalar

தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் விழா

Added : ஜன 15, 2022
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பொங்கலையொட்டி நேற்று பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தர்மபுரி மாவட்டம், விவசாயத்தை பிரதானமாக கொண்டது. இப்பகுதியில், பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையான நேற்று, பொதுமக்கள் அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்தனர். பின், கிராமம் மற்றும் நகர்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பொங்கலையொட்டி நேற்று பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தர்மபுரி மாவட்டம், விவசாயத்தை பிரதானமாக கொண்டது. இப்பகுதியில், பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையான நேற்று, பொதுமக்கள் அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்தனர். பின், கிராமம் மற்றும் நகர் பகுதியிலுள்ள மக்கள், தங்களது வீடுகளின் முன் கோலமிட்டு பொங்கல் வைத்து, சூரியனை வழிபட்டு படையல் படைத்தனர். கிராமத்திலுள்ள மக்கள், மாலை நேரத்தில் பெரிய அளவிலான பானை வைத்து, சிறப்பு வழிபாடு செய்து படையலிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X