சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் இருவர் பலி; பொதுமக்கள் சாலை மறியல்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
நல்லம்பள்ளி: பாளையம்புதூரில், டூவீலர் மீது பிக்கப் வாகனம் மோதிய விபத்தில், இருவர் இறந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூரை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி, 29, திருஞானம், 26, பூபேஸ், 30. இவர்கள் யமாஹா கிரஸ் பைக்கில் சனிசந்தை பகுதியிலிருந்து, பாளையம்புதூருக்கு நேற்று மாலை, 6:50 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

நல்லம்பள்ளி: பாளையம்புதூரில், டூவீலர் மீது பிக்கப் வாகனம் மோதிய விபத்தில், இருவர் இறந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூரை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி, 29, திருஞானம், 26, பூபேஸ், 30. இவர்கள் யமாஹா கிரஸ் பைக்கில் சனிசந்தை பகுதியிலிருந்து, பாளையம்புதூருக்கு நேற்று மாலை, 6:50 மணிக்கு சென்று கொண்டிருந்தனர். பாளையம்புதூர், நான்குரோடு பகுதியை கடக்க முயன்றபோது, சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பிக்கப் வாகனம், டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில், பெருமாள்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், திருஞானம் இறந்தார். பூபேஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்த பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். தொப்பூர் போலீசார் சமாதானப்படுத்திய பின், மறியலை கைவிட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X