சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த நொச்சிக்குட்டை கோவில் வனம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார், 25. இவர் தனது மாருதி காரில், காரிமங்கலத்திற்கு நேற்று காலை சென்று விட்டு, மாலை உறவினர்கள் மூவருடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். புட்டிரெட்டிபட்டி சாலையில் வெ.புதூரை தாண்டி செல்லும் போது, ஆற்றுபாலம் அருகே காரின் முன்பக்கத்தில் இருந்து புகை

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த நொச்சிக்குட்டை கோவில் வனம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார், 25. இவர் தனது மாருதி காரில், காரிமங்கலத்திற்கு நேற்று காலை சென்று விட்டு, மாலை உறவினர்கள் மூவருடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். புட்டிரெட்டிபட்டி சாலையில் வெ.புதூரை தாண்டி செல்லும் போது, ஆற்றுபாலம் அருகே காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்தது. இதனையடுத்து, காரை அங்கேயே நிறுத்தி விட்டு அனைவரும் கீழே இறங்கினர். தொடர்ந்து காரில் இருந்து அதிகளவில் புகை வந்தது. பின்னர் காரின் முன்பகுதியில் பேட்டரி உரசி தகதகவென தீப்பற்றி எரிந்தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. முழுமையாக தீ அணைக்கப்பட்டது. காரில் சென்ற நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X