இரு சக்கர வாகனங்கள் மோதி ஒருவர் பலி| Dinamalar

இரு சக்கர வாகனங்கள் மோதி ஒருவர் பலி

Added : ஜன 15, 2022 | |
கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கூத்தாண்டஹள்ளியை சேர்ந்தவர் நாகராஜ், 60, இவரும் தொட்டதிம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த முருகேசன், 60 என்பவரும் கடந்த, 13ல், காலை, 5:30 மணிக்கு கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலை, சோக்காடி கூட்ரோடு அருகே தங்களது ஹீரோ ஹோண்டா ரைடர் பைக்கில் சென்றுள்ளனர். பைக்கை நாகராஜ் ஓட்டியுள்ளார். அப்போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால், நிலைதடுமாறிய

கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கூத்தாண்டஹள்ளியை சேர்ந்தவர் நாகராஜ், 60, இவரும் தொட்டதிம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த முருகேசன், 60 என்பவரும் கடந்த, 13ல், காலை, 5:30 மணிக்கு கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலை, சோக்காடி கூட்ரோடு அருகே தங்களது ஹீரோ ஹோண்டா ரைடர் பைக்கில் சென்றுள்ளனர். பைக்கை நாகராஜ் ஓட்டியுள்ளார். அப்போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால், நிலைதடுமாறிய பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முருகேசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். படுகாயமடைந்த நாகராஜ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X