லாட்ஜ் ஊழியரை தாக்கியவர் கைது| Dinamalar

லாட்ஜ் ஊழியரை தாக்கியவர் கைது

Added : ஜன 15, 2022
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வண்ணத்திபட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன், 39. தேன்கனிக்கோட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 13ல், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த புட்டப்பா, 33 என்பவர் அந்த லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். அறையை சுத்தம் செய்வதற்காக சென்று, கதவை தட்டிய முனியப்பனை தகாத வார்த்தையால் பேசிய புட்டப்பா, காலால் எட்டி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வண்ணத்திபட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன், 39. தேன்கனிக்கோட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 13ல், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த புட்டப்பா, 33 என்பவர் அந்த லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். அறையை சுத்தம் செய்வதற்காக சென்று, கதவை தட்டிய முனியப்பனை தகாத வார்த்தையால் பேசிய புட்டப்பா, காலால் எட்டி உதைத்துள்ளார். இதுகுறித்து முனியப்பன் அளித்த புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து, புட்டப்பாவை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X