கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு அடி உதை| Dinamalar

கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு அடி உதை

Added : ஜன 15, 2022
கிருஷ்ணகிரி: கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு அடி, உதை விழுந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரகு வீரபாண்டியன், 21. இவர் ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில், தினக்கூலியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ரகு வீரபாண்டியனின் பாட்டியிடம் இருந்து, அதே பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மாமா, 10 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி: கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு அடி, உதை விழுந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரகு வீரபாண்டியன், 21. இவர் ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில், தினக்கூலியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ரகு வீரபாண்டியனின் பாட்டியிடம் இருந்து, அதே பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மாமா, 10 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பலமுறை கேட்டும் கடனை திருப்பி கொடுக்கவில்லை. கடந்த, 11ல், ராயக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் சென்ற திருப்பதியிடம், இதுகுறித்து ரகு வீரபாண்டியன் கேட்டுள்ளார். அதற்கு கடனை தர மறுத்த திருப்பதி தரப்பினர், ரகு வீரபாண்டியனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரகு வீரபாண்டியன், நேற்று முன்தினம் ராயக்கோட்டை போலீசில் அளித்த புகார்படி, திருப்பதி, அவரது மாமா உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X