பொது செய்தி

இந்தியா

குடியரசு தின கொண்டாட்டம் ஜன.,23ல் துவக்கம்: மத்திய அரசு முடிவு

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை (ஜன.,23) சேர்த்து கொண்டாடும் வகையில், குடியரசு தின கொண்டாட்டத்தை ஜன.,24க்கு பதில் 23ல் துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய குடியரசு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி வெகு சிறப்பாகவும், உற்சாகமாகவும் நாட்டின் பலம் மற்றும் முப்படைகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் கொண்டாடப்படும். அதேநேரத்தில்,
குடியரசு தின கொண்டாட்டம், மத்திய அரசு, முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை (ஜன.,23) சேர்த்து கொண்டாடும் வகையில், குடியரசு தின கொண்டாட்டத்தை ஜன.,24க்கு பதில் 23ல் துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய குடியரசு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி வெகு சிறப்பாகவும், உற்சாகமாகவும் நாட்டின் பலம் மற்றும் முப்படைகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் கொண்டாடப்படும். அதேநேரத்தில், குடியரசு தினம் தொடர்பான கொண்டாட்டம் ஜன.,24ம் தேதியே துவங்கி விடும்.


latest tamil news


இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளையும் சேர்த்து கொண்டாடும் வகையில், குடியரசு தின கொண்டாட்டங்களை ஜன.,23ல் துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நமது வரலாறு மற்றும் கலாசார அம்சங்களை போற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு கொண்டுள்ள கவனத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேதாஜி பிறந்த நாள் 'வலிமை தினமாக' (பரக்ரம் திவாஸ்) மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நேதாஜி தொடர்பான இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் சுற்றுலா தலமாக மாற்றவும் மத்திய அரசு திட்டங்களை தீட்டி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
16-ஜன-202215:30:10 IST Report Abuse
sankar குடியரச்சு தினக்கொண்டாட்டம் இந்த ஆண்டு மிக எளிமையாக கொண்டாடுவது தான் நல்லது. 24 ஆயிரம் பேர் என்பது மிக அதிகம். கொரானாவைக் கருத்தில் கொண்டு சென்ற ஆண்டு அமெரிக்க அதிபர் பைடன் தன் பதவை ஏற்பு விழாவை மிக மிக எளிமையாகக் கொண்டாடியதை முன் உதாரணமாக கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
15-ஜன-202216:11:28 IST Report Abuse
ஆரூர் ரங் அது ஆகஸ்ட் 15 ஆச்சே . யார் தேதிய மாற்றினது ? 😇😇ஸ்டாலின் குழப்பம்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
15-ஜன-202216:01:02 IST Report Abuse
 Muruga Vel கொரோனா காலத்தில் கட்டுப்பாட்டுடன் குறைந்த எண்ணிக்கையில் கொண்டாடலாம் ..போன வருஷ அவலங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X