வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை (ஜன.,23) சேர்த்து கொண்டாடும் வகையில், குடியரசு தின கொண்டாட்டத்தை ஜன.,24க்கு பதில் 23ல் துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய குடியரசு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி வெகு சிறப்பாகவும், உற்சாகமாகவும் நாட்டின் பலம் மற்றும் முப்படைகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் கொண்டாடப்படும். அதேநேரத்தில், குடியரசு தினம் தொடர்பான கொண்டாட்டம் ஜன.,24ம் தேதியே துவங்கி விடும்.

இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளையும் சேர்த்து கொண்டாடும் வகையில், குடியரசு தின கொண்டாட்டங்களை ஜன.,23ல் துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நமது வரலாறு மற்றும் கலாசார அம்சங்களை போற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு கொண்டுள்ள கவனத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேதாஜி பிறந்த நாள் 'வலிமை தினமாக' (பரக்ரம் திவாஸ்) மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நேதாஜி தொடர்பான இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் சுற்றுலா தலமாக மாற்றவும் மத்திய அரசு திட்டங்களை தீட்டி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE