பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாலையில் பொங்கல் வைத்த கும்மனூர் மக்கள்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூர் பகுதியில் பொங்கல் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவில், பெண்கள் ஒன்றுகூடி பொங்கலிட்டு வழிபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், திப்பனப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட கும்மனூர் ஸ்ரீ ராமர் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. நேற்று அதிகாலை நடந்த சிறப்பு விரத வழிபாட்டில், அப்பகுதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூர் பகுதியில் பொங்கல் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவில், பெண்கள் ஒன்றுகூடி பொங்கலிட்டு வழிபட்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், திப்பனப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட கும்மனூர் ஸ்ரீ ராமர் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. நேற்று அதிகாலை நடந்த சிறப்பு விரத வழிபாட்டில், அப்பகுதி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் ஸ்ரீராமர், சீதை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்மனூர் மாரியம்மன் கோவிலில், ஊர் கூடி பொங்கல் நிகழ்ச்சியில் தைத்திருநாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் அதிகாலை, 4:00 மணியளவில் ஒரே நேரத்தில் ஒன்றுகூடி புதுப்பானை புது அரிசியில் பொங்கலிட்டு ஊர் வழக்கப்படி அம்மனை வழிபட்டனர். பஞ்.,தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன், ஊர் கவுண்டர் வீரப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X