பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி பள்ளியில் மாணவர் குழு தொடக்கம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர் குழுவானது ஸ்டேண்டர்ட்ஸ் கிளப் பெயரில் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் மாணவர்களின் திறன் வளர்த்தல், பொது அறிவை வளர்த்து கொள்ளுதல், விழிப்புணர்வு பெறுதல், கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை உருவாக்குதல் மற்றும் கலந்து கொள்ளுதல் ஆகியவையாகும். சென்னையை துணை மையமாக கொண்ட பிரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர் குழுவானது ஸ்டேண்டர்ட்ஸ் கிளப் பெயரில் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் மாணவர்களின் திறன் வளர்த்தல், பொது அறிவை வளர்த்து கொள்ளுதல், விழிப்புணர்வு பெறுதல், கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை உருவாக்குதல் மற்றும் கலந்து கொள்ளுதல் ஆகியவையாகும். சென்னையை துணை மையமாக கொண்ட பிரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் அமைப்பானது, ஸ்டேண்டர்ட்ஸ் கிளப் என்ற அமைப்பை துவங்கி, மேற்கண்ட திறன்களை மாணவ, மாணவியர் வளர்த்துக்கொள்ள ஏற்பாடு செய்கிறது. இதன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளராக முகுந்தன், குழு நடவடிக்கையை தொடங்கி ஹால்மார்க், ஐ.எஸ்.ஐ., பற்றிய விழிப்புணர்வு தகவலை அதற்கான படத்தோடு விளக்கினார். இவர் சென்னை அமைப்பின் அறிவியல் விஞ்ஞானி. பள்ளி சார்ந்த ஸ்டேண்டர்ட்ஸ் மாணவர் குழு பொறுப்பாளரான கணினி ஆசிரியர் மோகன் மாணவர் குழுவை அறிமுகப்படுத்தினார். தலைமையாசிரியர் சூசைநாதன், ஆர்.எம்.எஸ்.ஏ., ஒருங்கிணைப்பாளர் வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X