பஞ்சாப் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்.,

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.பஞ்சாப் சட்டசபைக்கு பிப்.,14ல் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற சிரோன்மணி அகாலிதளமும் மற்றும் அமரீந்தர் சிங் பா.ஜ., கூட்டணியும் முனைப்பு காட்டி வருகின்றன. மற்றொரு முனையில் ஆம் ஆத்மி ஆட்சியை
Congress,Punjab,காங்கிரஸ்,பஞ்சாப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் சட்டசபைக்கு பிப்.,14ல் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற சிரோன்மணி அகாலிதளமும் மற்றும் அமரீந்தர் சிங் பா.ஜ., கூட்டணியும் முனைப்பு காட்டி வருகின்றன. மற்றொரு முனையில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தீவிரம் காட்டி வருகிறது. முதல்வர் வேட்பாளர் குறித்து மக்களின் கருத்தை கேட்டுள்ளது. இதில் பல லட்சம் பேரின் கருத்துகள் கிடைத்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 86 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி- சம்காவுர் சாஹிப் தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் சித்து- அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியிலும் , பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் மோகா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X