8 பேர் பயணிக்கும் கார்களில் 6 ஏர் பேக்குகள் கட்டாயம்: மத்திய அரசு முடிவு

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: 8 பேர் செல்லக்கூடிய கார்களில் குறைந்தபட்சம் 6 ஏர் பேக்குகள் கட்டாயம் எனவும், வரும் அக்டோபர் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள்(1989) திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டத்தை அந்த அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
Car, Air Bag, Mandatory, கார், ஏர் பேக், கட்டாயம், மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 8 பேர் செல்லக்கூடிய கார்களில் குறைந்தபட்சம் 6 ஏர் பேக்குகள் கட்டாயம் எனவும், வரும் அக்டோபர் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள்(1989) திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டத்தை அந்த அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 2022 அக்.,1 க்கு பின், 8 பேர் பயணம் செல்லும் கார்களில் ஒட்டுநர், பக்கவாட்டில் அமர்ந்திருப்போர், பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகள் என அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், 6 ஏர் பேக்குகளை பொருத்துவது கட்டாயம்.



பின்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு பக்கவாட்டிலும், டிரைவர், அவர் அருகே முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிக்கும் டேஸ் போர்டில் இருந்து ஏர் பேக்குகள் பொருத்தபட வேண்டும். ஒவ்வொரு ஏர் பேக்கும் பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கையை மூடும் வகையில் இருக்க வேண்டும். விபத்து காலத்தில் டிரைவர் மற்றும் மோதும் வாகனங்களுக்கு இடையே பெருத்த சேதத்தை தவிர்த்து உயிரிழப்புகளையும், தீவிர காயத்தையும் தடுக்கும் நோக்கத்தில் இந்த பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.




latest tamil news



இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், பின்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கார்களுக்கும் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம். ஆனால், குறைந்த விற்பனை கார்களில் செலவு சற்று கூடுதலாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஜன-202208:37:44 IST Report Abuse
M  Ramachandran முதலில் காலாவதியான அநியாய கொள்ளை டோல்க்கேட் சுங்க வசூல் கொள்ளையை தவிருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X