அமேசான், பெட்எக்ஸ் நிறுவன பொருட்கள் கொள்ளை: சரக்கு ரயிலில் திருடர்கள் அட்டகாசம்| Dinamalar

அமேசான், பெட்எக்ஸ் நிறுவன பொருட்கள் கொள்ளை: சரக்கு ரயிலில் திருடர்கள் அட்டகாசம்

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (2) | |
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், அமேசான், பெட் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான சரக்கு ரயில்களில் ஆன்லைனில் வாங்கப்பட்ட பொருட்களை கொள்ளையடித்து சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான பொருட்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைவது இல்லை என தெரியவந்துள்ளது.இந்த சம்பவங்களினால், அமேசான், டார்கெட்,
Thieves,  Amazon, FedEx, Train Cargo, Packets, Tracks,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், அமேசான், பெட் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான சரக்கு ரயில்களில் ஆன்லைனில் வாங்கப்பட்ட பொருட்களை கொள்ளையடித்து சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான பொருட்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைவது இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவங்களினால், அமேசான், டார்கெட், யுபிஎஸ் மற்றும் பெட்எக்ஸ் நிறுவனங்கள் திருடர்களால் பாதிக்கப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் ரயில் நிற்கும் வரை காத்திருக்கும் கொள்ளையர்கள் அதன் பிறகு, போல்ட் கட்டர்களை பயன்படுத்தி, சரக்கு பெட்டிகளுக்குள் நுழைந்து விலை மலிவான பொருட்கள், பார்சல்கள், கோவிட் சோதனை கருவிகள், மரச்சாமான்களை கொள்ளையடிக்கின்றனர். இதில் பல பொருட்களை தண்டவாளத்திலேயே வீசிவிட்டு செல்கின்றனர்.


latest tamil news


கடந்த 2020 டிச., முதல் தற்போது வரை இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் 160 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரயில் இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2020 அக்., மாதத்தை ஒப்பிடுகையில் 2021 அக். ,மட்டும் 356 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021 கடைசி காலாண்டில் மட்டும் தினமும், 90 கன்டெய்னர்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதனை தடுப்பதற்காக அந்நாட்டு ரயில்வே, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்புக்கு கூடுதல் ஊழியர்களை நியமித்துள்ளது.

கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 100 பேர் வரை கைது செய்யப்பட்டாலும் அவர்கள் மீது சாதாரண வழக்குகளே பதிவு செய்யப்படுகிறது. இதனால், அவர்கள் அபராதத்தை செலுத்திவிட்டு 24 மணி நேரத்தில் வெளியே வந்து மீண்டும் தங்களது கைவரிசையை காட்ட துவங்கி விடுகின்றனர். இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என லாஸ் ஏஞ்சல்ஸ் அட்டர்னி ஜெனரலை, ரயில்வே அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

கடந்த 2021 ம் ஆண்டு மட்டும் திருட்டு சம்பவத்தால் 5 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X