இனி பாஜ.,விலிருந்து வருபவர்களுக்கு இடமில்லை: அகிலேஷ் யாதவ்

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (10)
Share
Advertisement
டில்லி: இனி பாஜ.,விலிருந்து வருபவர்களுக்கு இடமில்லை என அகிலேஷ் யாதவ் தெரித்துள்ளார்.உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து யோகி ஆதித்யநாத் அரசு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள உத்தரபிரதேச தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் அறிவித்தது. யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டில்லி: இனி பாஜ.,விலிருந்து வருபவர்களுக்கு இடமில்லை என அகிலேஷ் யாதவ் தெரித்துள்ளார்.



latest tamil news




உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து யோகி ஆதித்யநாத் அரசு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள உத்தரபிரதேச தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் அறிவித்தது. யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியது.

பாஜ.,வை சேர்ந்த ஓபிசி தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களான சுவாமி பிரசாத் மௌரியா மற்றும் தரம் சிங் சைனி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சமாஜ்வாடி கட்சி கட்சியில் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.


latest tamil news



இதேபோல பாஜ., சட்டமன்ற உறுப்பினர்களான ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி, முகேஷ் வருமா, வினை சங்கையா பகவதி சாகர் உள்ளிட்டவர்களும் பாஜகவிலிருந்து பிரிந்து சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்.
இதனையடுத்து தற்போது இதுகுறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இனி பாஜ.,விலிருந்து யாரும் சமாஜ்வாடி கட்சியில் சேர அனுமதி இல்லை என்றும் ஏற்கனவே சமாஜ்வாடி கட்சியில் இடங்கள் நிரம்பி விட்டன என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nizamudin - trichy,இந்தியா
16-ஜன-202213:58:49 IST Report Abuse
nizamudin வேண்டாம் இவர்கள் உளவாளிகளாக இருக்கலாம் ?
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
16-ஜன-202213:19:46 IST Report Abuse
Hari பிரசாந்து கிசோர் என்ன சொல்றாருன்னு ஒருமுறை அவரிடம் கேட்டுக்குங்க.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
16-ஜன-202210:17:38 IST Report Abuse
duruvasar நிரம்பினால் என்ன. 153 அடிவரை தேக்கலமே. மேலும் மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை கொண்டுவர பூர்வாஞ்சல் மண்டல பொருப்பாளாராக சுவாமி மயூராவை நியமித்து விடுங்கள்.சி + + + நன்கு தெரிந்தவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X