தற்காப்பு கலை போட்டி: முதலிடம் பிடித்த குழு| Dinamalar

தற்காப்பு கலை போட்டி: முதலிடம் பிடித்த குழு

Added : ஜன 15, 2022 | |
திருப்பூரில், பெருமாநல்லுார் எஸ்.எஸ்.எஸ்., ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் 'ஷாவோலின் பயர் டிராகன் ஸ்போர்ட்ஸ் குங்பூ இன்டர்நேஷனல்' ஆகியவை இணைந்து நடத்திய, ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கான தற்காப்பு கலை போட்டி நடந்தது.தமிழகத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்ட குழுவினர் பங்கேற்றனர். அதில் கடந்த, 28 ஆண்டுகளாக, பந்தலுாரில் செயல்பட்டு வரும் 'பவர் ஷாவோலின் குங்பூ' தற்காப்பு

திருப்பூரில், பெருமாநல்லுார் எஸ்.எஸ்.எஸ்., ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் 'ஷாவோலின் பயர் டிராகன் ஸ்போர்ட்ஸ் குங்பூ இன்டர்நேஷனல்' ஆகியவை இணைந்து நடத்திய, ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கான தற்காப்பு கலை போட்டி நடந்தது.

தமிழகத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்ட குழுவினர் பங்கேற்றனர். அதில் கடந்த, 28 ஆண்டுகளாக, பந்தலுாரில் செயல்பட்டு வரும் 'பவர் ஷாவோலின் குங்பூ' தற்காப்பு கலையில் பள்ளியில் படித்து வரும்,20 மாணவர்கள் பங்கேற்றனர்.போட்டியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பயிற்சியாளர்கள், ரகுராம், வீரான் குட்டி, சிவகுமார், பாபு ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X