தமிழ்நாடு

மாவட்டம் முழுவதும் உற்சாக பொங்கல் கொண்டாட்டம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும், மக்கள் தங்கள் வீடுகளில், பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்கு படையலிட்டு வழிபட்டனர்.பொங்கல் பண்டிகை, போகியில் தொடங்கி, காணும் பொங்கல் வரை, நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படும். சூரியன், மகரம் ராசியில் பயணிக்கும் நாள் தை திருநாளாக கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடதிசை பயணம் உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்கத்தை, தமிழர்கள், பொங்கல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும், மக்கள் தங்கள் வீடுகளில், பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்கு படையலிட்டு வழிபட்டனர்.


பொங்கல் பண்டிகை, போகியில் தொடங்கி, காணும் பொங்கல் வரை, நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படும். சூரியன், மகரம் ராசியில் பயணிக்கும் நாள் தை திருநாளாக கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடதிசை பயணம் உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்கத்தை, தமிழர்கள், பொங்கல் பண்டிகையாக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் என்பது பொங்கு என்னும் சொல்லில் இருந்து வந்தது. அறுவடை முடிந்து புது நெல் வந்திருக்கும், அதனால், அதை குத்தி, அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. அதன்படி, நாமக்கல் மாவட்டம் முழுவதும், இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி சொல்லும் வகையில், தை முதல் நாளான நேற்று, காலையிலேயே, பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு, அலங்கரித்து இறைவனை வரவேற்றனர். மேலும், புத்தாடை அணிந்து, வீட்டு வாசலில், புதுப்பானையில் மஞ்சள், இஞ்சி கொத்து கட்டி, பொங்கல் வைத்து சூரியக்கடவுளுக்கு படையலிட்டு நன்றி கூறி வழிபட்டனர்.

சூரியனுக்கு பொங்கல்: சேந்தமங்கலம் அடுத்த, முத்துகாபட்டி கருப்பனார் கோவில் வீதியில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சூரியனுக்கு பொங்கல் வைத்து, தீபாராதனை செய்து வழிபட்டனர். மேலும் அன்னதானம் வழங்கி, பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X