கரும்பு டன்னுக்கு ரூ.4,000, நெல் குவிண்டால் ரூ.2,500: பொய்த்த வாக்குறுதி: தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றம்| Dinamalar

கரும்பு டன்னுக்கு ரூ.4,000, நெல் குவிண்டால் ரூ.2,500: பொய்த்த வாக்குறுதி: தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றம்

Added : ஜன 15, 2022 | |
நாமக்கல்: ''கரும்புக்கு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும்' என, தேர்தல் அறிவிக்கையில் கூறியதை நிறைவேற்றாமல், பெயரளவுக்கு சொற்ப தொகையை வழங்கியுள்ளது, விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது,'' என, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் விருத்தகிரி கூறினார்.இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது: சர்க்கரை பருவம்

நாமக்கல்: ''கரும்புக்கு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும்' என, தேர்தல் அறிவிக்கையில் கூறியதை நிறைவேற்றாமல், பெயரளவுக்கு சொற்ப தொகையை வழங்கியுள்ளது, விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது,'' என, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் விருத்தகிரி கூறினார்.

இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது: சர்க்கரை பருவம் என்பது, அக்., 1ல் துவங்கி, செப்., 30 வரையாகும். 202021ம் ஆண்டுக்கான சர்க்கரை பருவம் முடிந்து, 2021-22ம் ஆண்டு சர்க்கரை பருவம் துவங்கி உள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் என, 44 சர்க்கரை ஆலைகள் இயங்கின. தற்போது, 10 ஆலைகள் மூடப்பட்டு, 34 மட்டுமே செயல்படுகிறது. காரணம், போதுமான கரும்பு உற்பத்தி இல்லாமல், சாகுபடி பரப்பளவு குறைந்தது, சர்க்கரை தொழில் லாபகரமாக இல்லாததே. கடந்த, 2020-21ம் பருவத்தில், விவசாயிகளுக்கு, மத்திய அரசு அறிவித்த விலையில் கூடுதலாக, மாநில அரசு வழங்குவதாகவும், சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதாகவும் அறிவித்தது. மேலும், தமிழக அரசின் விவசாயத்துக்கான முதல் தனி நிதி நிலை அறிக்கையில், மத்திய அரசு வழங்கிய, 2,707.50 ரூபாயுடன், மாநில அரசு ஊக்கத்தொகையை சேர்த்து, 2,900 ரூபாய் டன் ஒன்றுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு, 42.50 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்று, 150 ரூபாய் என, மொத்தம, 192.50 ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். பருவம் முடிந்து அடுத்த பருவம் துவங்கிய நிலையில், மூன்று ஆலைகளில் மட்டுமே, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஆலைகளிலும் ஊக்கத்தொகையை இம்மாதமே வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு அறிவித்த விலையை மட்டுமே, மாநில அரசு வழங்கியது. அதேபோல், நெல் கிலோவுக்கு, 50 காசு உயர்த்தப்பட்டு, குவிண்டாலுக்கு, 50 ரூபாய் என மொத்தம், 2,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில், 'கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அரவை பருவம் மற்றும் நெல் அறுவடையும் துவங்கிய நிலையில், தமிழக அரசு, 'சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்' என்பதை பொய்யாக்கியுள்ளது. இது, விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தமிழகத்தில், தொடர் பருவமழை காரணமாக கரும்பு சாகுபடி மற்றும் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X