ப.வேலூர்: ப.வேலூர் அருகே, கூலித்தொழிலாளி மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்துள்ளார்.
ப.வேலூர் அடுத்த பொத்தனூர் தேவராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 26; சிமென்ட் கம்பெனியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மணிகண்டன் வீட்டு முன்புறம் ரமேஷ், ரவி, குமார் ஆகிய மூவரும் கார் நிறுத்துவது தொடர்பாக, மணிகண்டனிடம் பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரமேஷ், ரவி, குமார் ஆகிய மூவருக்கும் மணிகண்டனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, அருகில் உள்ளவர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், மணிகண்டன் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால், சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, மணிகண்டன் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. டி.எஸ்.பி., ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் வீட்டின் முன்புறம் நின்ற காரை, பறிமுதல் செய்து மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டு தலைமறைவான ரமேஷ், ரவி, குமார் ஆகிய மூவரையும் ப.வேலூர் போலீசார் தேடி வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement