கரூர்: கரூர், குளித்தலையில், நேற்று, குடும்பத்துடன் வீட்டு வாசலில் பொங்கலிட்டு, சூரியனுக்கு நன்றி தெரிவித்து, உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழகத்தில் தை பிறப்பில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, கொரோனா பரவலால், ஜன., 18 வரை கோவில்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதும், நேற்று கரூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. வீடுகளின் முன் கரும்பு தோரணம் அமைத்து, புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்து, சூரியனுக்கு வழிபாடு நடத்தினர். பொங்கல் பொங்கும் போது, பொங்கலோ பொங்கல் என கூவியபடி, வாழ்த்து தெரிவித்து கொண்டனர். இதில், தமிழக பாரம்பரிய உடைகளான வேட்டி சட்டை, சேலை, பட்டு பாவாடை உள்ளிட்ட புத்தாடைகளை அணிந்து கொண்டாடினர். அக்கம் பக்கத்தினருக்கு, கரும்பு, பொங்கல் உள்ளிட்டவைகளோடு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். பல இடங்களில், சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல், குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., மேட்டுமருதூர் கிராம மக்கள், நேற்று காலை, வீட்டு வாசலில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து, உற்சாகமாக கொண்டாடினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE