தமிழ்நாடு

மூன்று ஆண்டுக்கு ஒருமுறை கிராம பஞ்., செயலாளர்களை இடமாற்றம் செய்யப்படுமா?

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கரூர்: கிராம பஞ்., செயலாளர்களை, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும் என, புதிய பஞ்., தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் கடந்த, 2019, டிச.,ல், ஊரக பகுதியிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. அதன் பின், 2020 ஜன.,6ல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதற்கு முன், 2016 அக்., முதல் ஐந்தாண்டுகளாக கிராம பஞ்., நிர்வாகத்தில்,

கரூர்: கிராம பஞ்., செயலாளர்களை, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும் என, புதிய பஞ்., தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தமிழகத்தில் கடந்த, 2019, டிச.,ல், ஊரக பகுதியிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. அதன் பின், 2020 ஜன.,6ல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதற்கு முன், 2016 அக்., முதல் ஐந்தாண்டுகளாக கிராம பஞ்., நிர்வாகத்தில், தலைவர்கள் பொறுப்பில் இல்லாத போது, செயலாளர்கள் தான் கவனித்து வந்தனர். மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட பஞ்., பஞ்., யூனியன் மற்றும் டவுன் பஞ்., செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். ஆனால், ஒரே கிராம பஞ்., செயலாளர் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருப்பது வழக்கம். பஞ்., தலைவர்களுக்கு இணையாக, செயலாளர்களின் பொறுப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம், புதிதாக பஞ்., தலைவர் பதவிக்கு வருகிறவர்களுக்கு, உள்ளாட்சித்துறை சட்டத்திட்டங்கள் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை பயன்படுத்தி, பஞ்., செயலாளர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, பஞ்., செயலாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, புதிய பஞ்., தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கடந்த, 2016-19 வரை மூன்று ஆண்டாக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் இல்லை. இதனால், மாநகராட்சி முதல், கிராம பஞ்., வரை அரசு அதிகாரிகள் தான் பொறுப்புகளை கவனித்து வந்தனர். மாநகராட்சி, நகராட்சி மற்றும் டவுன் பஞ்.,களில் நடக்கும் தவறுகள் ஓரளவுக்கு வெளியே தெரிகின்றன. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் நிதி அதிகளவில் குவியும், கிராம பஞ்.,களில் நடைபெறும் முறைகேடுகள் வெளியே தெரிவது இல்லை. குறிப்பாக, கிராம பஞ்.,களில் புதிய குடிநீர் இணைப்புக்கு பணம் பெற்றுக்கொண்டு, பல செயலாளர்கள் ரசீது வழங்குவதில்லை. மேலும், சொத்து வரி வசூல் செய்வதில், செயலாளர்கள் அவர்களது இஷ்டம் போல் செயல்படுகின்றனர். இதனால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X