சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல்வேறு இடங்களில் மது விற்ற 7 பேர் கைது

Added : ஜன 15, 2022
Share
Advertisement
குளித்தலை: பல்வேறு இடங்களில் மது விற்ற, 7 பேரை போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த, மம்பத்தையூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த கருப்பன் மகன் ரவி, 49, என்பவர் தனது பெட்டி கடையில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். சோதனையிட்டு, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், வீரமலைபாளையம் ஓட்டல் அருகே,

குளித்தலை: பல்வேறு இடங்களில் மது விற்ற, 7 பேரை போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த, மம்பத்தையூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த கருப்பன் மகன் ரவி, 49, என்பவர் தனது பெட்டி கடையில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். சோதனையிட்டு, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், வீரமலைபாளையம் ஓட்டல் அருகே, பம்பரம் முத்தம்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரமேஷ், 24, என்பவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சிந்தாமணிப்பட்டி போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து, கைதுசெய்தனர். இதேபோல், அம்மன் நகரைச் சேர்ந்த தண்டபாணி மனைவி மேகலா, 33, மஞ்சமேடு மேலகார தெரு மருதநாயகம், 73, நடராஜபுரம் ரத்தினம் மகன் ஆசைத்தம்பி, கல்லடையை சேர்ந்த முத்துசாமி, 62, கரையாம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி, 40, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X