கரூர்: தொழில் நகரான கரூரில், படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்க வேண்டும் என, தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், தொழில் வளம் மிகுந்த நகராக கரூர் உள்ளது. இங்கு, ஜவுளி, சாயப்பட்டறை ஆலைகள், பஸ் பாடி, கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் கரூரில் உள்ளன. அதில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழில் நிறுவனங்களில், மருத்துவ வசதிக்காக ஊதியம் பிடிக்கப்படும் நிலையில், சிகிச்சை அளிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. கரூரில் ரயில்வே ஸ்டேஷன் அருகே, இயங்கி வரும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை, காலை, 7:00 முதல் 10:30 வரை, மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை மட்டும் இயங்கி வருகிறது. ஆனால், அங்கு படுக்கை வசதி கிடையாது. இதனால், அவசரகால நோயாளிகள், திருச்சி அல்லது சேலம் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதிநவீன ஸ்கேன் வசதியும் இல்லை. இதனால், தொழிலாளர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, தொழிலாளர்கள் கூறுகையில், 'கரூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. சிறிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. ஒரு சில டாக்டர்கள் மட்டும் பணியில் உள்ளனர். நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் வருவது இல்லை. மேல் சிகிச்சைக்காக சென்னை, சேலம், திருச்சி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த கரூரில், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் படுக்கை வசதியை ஏற்படுத்தி, நவீன மருத்துவ கருவிகளை அமைக்க வேண்டும்' என்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement