மணவாசி டோல்கேட்டில் பராமரிப்பு இல்லாத கழிப்பிடத்தால் அவதி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே டோல் கேட்டில், கழிப்பிடம் பூட்டப்பட்டு, பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணவாசியில், டோல்கேட் உள்ளது. அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், கரூர் - திருச்சி சாலை, திருச்சி - கரூர் சாலையில், டோல்கேட்டையொட்டி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இரண்டு

கரூர்: கரூர் அருகே டோல் கேட்டில், கழிப்பிடம் பூட்டப்பட்டு, பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.


கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணவாசியில், டோல்கேட் உள்ளது. அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், கரூர் - திருச்சி சாலை, திருச்சி - கரூர் சாலையில், டோல்கேட்டையொட்டி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இரண்டு கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கழிப்பிடங்களை நாள்தோறும் டோல்கேட் ஊழியர்கள் சுத்தம் செய்வது இல்லை. இதனால், தொற்று நோய் பரப்பும் மையமாக, மணவாசி டோல்கேட் கழிப்பிடங்கள் உள்ளன. குறிப்பாக, கரூர்-திருச்சி சாலையில் உள்ள கழிப்பிடம், திறக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சாலையை கடந்து, எதிர் திசையில் உள்ள கழிப்பிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து, டோல் கேட் ஊழியர்களிடம் கேட்டால், அவர்கள் மிரட்டுவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் எழுந்துள்ளது. அதேபோல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உள்ள, இரண்டு காபி பார்களிலும், உணவு பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. எனவே, மணவாசி டோல்கேட்டில் உள்ள கழிப்பிடங்களை நாள்தோறும் திறந்து வைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

கலெக்டர் எச்சரித்தும் பயனில்லை: கரூர் மணவாசி டோல்கேட் முறையாக பராமரிப்பு செய்யப்படுவது இல்லை என, விளக்கம் கேட்டு கலெக்டர் பிரபுசங்கர், திட்ட மேலாளருக்கு கடந்த, 4ல் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால், மணவாசி டோல்கேட் ஊழியர்கள், தொடர்ந்து கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பராமரிக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X