வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டு உள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 10,988 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 23,459 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 23,989 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,43,536 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 23,978 பேர், ஜார்கண்ட் 3,பீஹார் மற்றும் மேற்குவங்க மாநிலத்திலிருந்து திரும்பியவர்கள் தலா இருவரும் குஜராத், சிக்கிம்,கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் என மொத்தம் 23,989 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,15,948 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,94,07,735 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 14,242 பேர் ஆண்கள், 9,747 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 17,03,341 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 12,12,569 ஆகவும் அதிகரித்து உள்ளது. 10,988 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,47,974 ஆக உயர்ந்துள்ளது.
11 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 4 பேரும் , அரசு மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,967 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,963 ஆக இருந்த நிலையில் இன்று (ஜன.15 ம் தேதி) 8,978ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்

