டில்லி 'உஷ்ஷ்ஷ்': எதிர்பார்ப்பில் ஸ்மிருதி இரானி

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (1)
Advertisement
பா.ஜ.,வில் சில முக்கிய தலைவர்கள், தங்களுக்கு சரியான பதவி கிடைக்காததால் கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் உள்ளனர். இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் ஒருவர். முதலில் இவருக்கு மனித வள மேம்பாட்டுத் துறை கொடுக்கப்பட்டது. பின் செய்தி ஒலிபரப்பு துறை தரப்பட்டது. அடுத்த சில மாதங்களில் ஜவுளித்துறை கொடுக்கப்பட்டது. பின் அதுவும் பிடுங்கப்பட்டு இப்போது பெண்கள் மற்றும்
 டில்லி 'உஷ்ஷ்ஷ்': எதிர்பார்ப்பில் ஸ்மிருதி இரானி

பா.ஜ.,வில் சில முக்கிய தலைவர்கள், தங்களுக்கு சரியான பதவி கிடைக்காததால் கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் உள்ளனர். இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் ஒருவர். முதலில் இவருக்கு மனித வள மேம்பாட்டுத் துறை கொடுக்கப்பட்டது. பின் செய்தி ஒலிபரப்பு துறை தரப்பட்டது. அடுத்த சில மாதங்களில் ஜவுளித்துறை கொடுக்கப்பட்டது. பின் அதுவும் பிடுங்கப்பட்டு இப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார். முக்கியத்துவம் இல்லாத துறை தரப்பட்டதால் அவர் அதிருப்தியில் உள்ளார்.
பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி நடந்த அன்று, பிரதமர் மோடி, அமைச்சர் ஸ்மிருதி இரானியை போனில் அழைத்து இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும்படி கூறியுள்ளார். தனக்கு நல்ல இலாகா கிடைக்கவில்லையே என நொந்து போயிருந்த ஸ்மிருதிக்கு பிரதமரின் போன் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு மீண்டும் மனிதவள மேம்பாட்டு துறை கிடைக்கும் என்பதற்கான அறிகுறியே பிரதமரின் போன் அழைப்பு என, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார்.உ.பி., தேர்தல் முடிவுக்குப் பின் மத்திய அமைச்சரவை மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.



தமிழக பிரமுகர் மீது ராகுல் கோபம்


வெளிநாட்டிற்கு சென்றிருந்த ராகுல் டில்லி வந்ததுமே ஐந்து மாநில தேர்தல் குறித்து ஆலோசனையில் இறங்கிவிட்டார். 'வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; யாரையும் சந்திக்கக் கூடாது' என்பது விதிமுறை; இருப்பினும் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் ராகுல்.
இரண்டு மூத்த தலைவர்களை டில்லியில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். இதில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர்களை தனித்தனி அறையில் அமர்த்தி விட்டு, தானும் ஒரு தனி அறையில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அவர்களுடன் பேசியுள்ளார் ராகுல்.'கோவாவில் பா.ஜ., தோல்வி அடைய வேண்டுமானால், மம்தா பானர்ஜி கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்., போட்டியிட வேண்டும்' என, தமிழகத்தைச் சேர்ந்த தலைவர், ராகுலிடம் கூறியுள்ளார். 'கோவாவில் நம் கட்சியின் முக்கிய தலைவர்களை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டவர் மம்தா. என்னைப் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருடன் கூட்டணி அமைப்பதா' என, ஆவேசப்பட்டுள்ளார் ராகுல்.

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மம்தாவிற்கு உதவி வருகிறார். இவர் தான் காங்-., - திரிணமுல் கூட்டணி வேண்டும் என சில காங்., தலைவர்களிடம் சொல்லி வருகிறார். 'வீடியோ வாயிலாக ஆலோசனை என்றால் எதற்கு எங்களை டில்லிக்கு அழைக்க வேண்டும். சொந்த ஊரிலிருந்தே இதை செய்திருப்போமே' என, அந்த இரண்டு காங்., தலைவர்களும் புலம்பி வருகின்றனர்.



குழப்பத்தில் ஆம் ஆத்மி!


பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.அமரீந்தர் சிங் வெளியேறி, பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்துள்ளதால் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பரிதாப நிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் இப்போது நல்ல நிலையில் உள்ளது. பஞ்சாயத்து தேர்தலில் அதிக வெற்றி பெற்றுள்ளது.

பல தேர்தல் கணிப்புகள் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கூறினாலும் பெரும்பான்மை கிடைக்காது என்கின்றன. ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பது இப்போது பெரிய பிரச்னையாகி விட்டது. இந்த கட்சியின் பஞ்சாப் தலைவர் பகவந்த் சிங் மான் தற்போது எம்.பி.,யாக உள்ளார். இவர் தான் முதல்வர் வேட்பாளர் என சொல்லப்படுகிறது.
ஆனால் கட்சி தலைவர் கெஜ்ரிவால் 'மக்களே முதல்வரைத் தேர்ந்தெடுக்கலாம்' என சொல்லி, ஒரு தொலைபேசி எண்ணை தெரிவித்துள்ளார். யார் முதல்வராக வேண்டும் என்பதை இந்த எண்ணுக்கு அழைத்து மக்கள் தெரிவிக்கலாமாம்.இதனால் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.



கொரோனாவில் சிக்கிய பட்ஜெட்


அடுத்த மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கான வேலைகள் ரகசியமாக டில்லியில் நிதி அமைச்சகம் உள்ள 'நார்த் ப்ளாக்கில்' நடக்கின்றன. பட்ஜெட் விபரங்கள் வெளியாகி விடக் கூடாது என்பதால் நிதி அமைச்சகத்தில் கீழ் தளத்தில் உள்ள ஒரு ஹாலில் பட்ஜெட் ஆவணங்கள், நிதி அமைச்சரின் பேச்சு ஆகியவை அச்சடிக்கப்படுகின்றன. இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரு மாதத்திற்கு வெளியே எங்கும் போகாமல் அச்சடிக்கும் இடத்திலேயே தங்க வேண்டும்.
இந்த முறை இப்படி தங்கியிருக்கும் ஊழியர்களில் இருவருக்கு கொரோனா. இவர்களை வெளியே அனுப்பவும் முடியாது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு விஷயம் சொல்லப் பட்டது. அந்த ஊழியர்கள் இருக்கும் இடத்திலேயே, அவர்களை தனிமைப்படுத்த முடி வெடுக்கப்பட்டது. அத்தோடு நிதி அமைச்சக அலுவலகத்தின் வெளியே இரண்டு ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டன. டாக்டர்கள் தினமும் இங்கு வந்த இவர்களை பரிசோதித்து விட்டுச் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
16-ஜன-202216:32:53 IST Report Abuse
sankar நம் புண்ணிய பூமியில், நடிகைகளுக்கு நாட்டை ஆளும் தகுதி வெகு இயற்கையாக அமையும் போல. இவர் முன்னாள் நடிகை என்பதால் அவரது ஆதங்கம் சரியே. பிரதமர் பதவிக்கு ட்ரை பண்ணலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X