தேசிய பாதுகாப்பு கொள்கை வெளியிட்டார் பாக்., பிரதமர்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை அந்நாட்டு பிரதமர் இம்ரான் நேற்று வெளியிட்டார்.அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் இதற்கு முன் இருந்த அரசுகள் தோல்வியடைந்தன.இப்போது வெளியிடப்பட்டுள்ள 100 பக்கங்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு கொள்கை மக்கள் நலன், பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றை முக்கியமாக வைத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை அந்நாட்டு பிரதமர் இம்ரான் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் இதற்கு முன் இருந்த அரசுகள் தோல்வியடைந்தன.இப்போது வெளியிடப்பட்டுள்ள 100 பக்கங்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு கொள்கை மக்கள் நலன், பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றை முக்கியமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.இதுவரை ராணுவ பலத்தை மட்டும் முக்கியமாக வைத்து, தேசிய பாதுகாப்பு கொள்கை இருந்து வந்துள்ளது.அண்டை நாடுகளுடன் அமைதி, பொருளாதாரம், வர்த்தகம் போன்றவற்றை மேம்படுத்துவதுதான் புதிய பாதுகாப்பு கொள்கையில் நோக்கமாக இடம் பெற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்பு கொள்கை பற்றி பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவுடன் 100 ஆண்டுகளுக்கு விரோத போக்கை கடைப்பிடிக்கப் போவதில்லை.புதிய கொள்கையின்படி அண்டை நாடுகளுடன் சமாதானமாகச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இருதரப்பு பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டால் இந்தியாவுடன் வர்த்தக உறவு மேம்பட வாய்ப்பு அதிகரிக்கும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X