அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்: அ.தி.மு.க., சபதம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
சென்னை: 'கோட்டையில் மீண்டும் அ.தி.மு.க., கொடி பறக்க பாடுபடுவோம்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை ஒட்டி அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தனி மனிதராக, கலைத் துறையின் நாயகராக, ஓர் இயக்கத்தின் தலைவராக மக்களின் பேராதரவை பெற்ற ஒளி விளக்கு எம்.ஜி.ஆர்., தனக்கென அவர் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. தன்

சென்னை: 'கோட்டையில் மீண்டும் அ.தி.மு.க., கொடி பறக்க பாடுபடுவோம்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை ஒட்டி அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தனி மனிதராக, கலைத் துறையின் நாயகராக, ஓர் இயக்கத்தின் தலைவராக மக்களின் பேராதரவை பெற்ற ஒளி விளக்கு எம்.ஜி.ஆர்., தனக்கென அவர் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. தன் திறமையாலும், உழைப்பாலும் பாடுபட்டு ஈட்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் செல்வத்தை ஏழைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உயில் எழுதி விட்டு சென்ற கொடை வள்ளல்.

தமிழ் இன எழுச்சியில் அக்கறை கொண்டோர் உருவாக்கிய இயக்கத்தை அழிக்க அராஜகம் செய்த, ஊழலும், சுயநலமும் கொண்ட தீய சக்திகளை எதிர்த்து துணிச்சலாக போராடியவர். தமிழகத்தை 10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், பல நுாறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் எடுத்துக்காட்டான திட்டங்களை நிறைவேற்றியவர். அவரது வழியில் அவரையே தன் மாதா, பிதா, குரு, தெய்வமாக ஏற்று வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில், வீரம், விவேகத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது.

பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, 'கார்ப்பரேட்' தேர்தல் பிரசாரம் செய்து, வெற்றி பெற்று வந்துள்ள, தி.மு.க.,வின் குடும்ப ஆட்சியை வேரறுக்க வேண்டிய நேரம் இது. தமிழகம் காக்க, தன்னல ஆட்சியை அகற்றுவோம். கோட்டையில் நம் கொடி பறந்திட செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X