சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

போலி நிருபர்களால் கதறும் கிரானைட் அதிபர்கள்!

Added : ஜன 15, 2022
Advertisement
போலி நிருபர்களால் கதறும் கிரானைட் அதிபர்கள்!''உள்வாடகை ஏலம் பரபரப்பா போயிக்கிட்டு இருக்கு பா...'' என்றபடியே திண்ணையில் அமர்ந்தார், அன்வர்பாய்.''என்ன விஷயம்ன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''தமிழகம் முழுதும், 'டாஸ்மாக் பார்' ஏலம் நடந்துக்கிட்டு இருக்கு... சேலம் மாவட்டத்துல, 212 டாஸ்மாக் கடைக்கு, கடந்த மாதம் பார் ஏலம் நடந்துச்சு

 டீ கடை பெஞ்ச்


போலி நிருபர்களால் கதறும் கிரானைட் அதிபர்கள்!''உள்வாடகை ஏலம் பரபரப்பா போயிக்கிட்டு இருக்கு பா...'' என்றபடியே திண்ணையில் அமர்ந்தார், அன்வர்பாய்.

''என்ன விஷயம்ன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''தமிழகம் முழுதும், 'டாஸ்மாக் பார்' ஏலம் நடந்துக்கிட்டு இருக்கு... சேலம் மாவட்டத்துல, 212 டாஸ்மாக் கடைக்கு, கடந்த மாதம் பார் ஏலம்
நடந்துச்சு பா...

''அதுல, ஆளுங்கட்சியினர் தான் ஏலம் எடுத்தாங்க... இப்போ அதை, உள்வாடகைக்கு விடுறதுக்கு, பரபரப்பா பேரம் நடந்துக்கிட்டு இருக்கு பா...

''அரசு நிர்ணயிச்ச பார் கட்டணத்தை, மாதந்தோறும் செலுத்தணும்... அதே தொகையை மாதந்தோறும், தங்களுக்கும் தரணும்ன்னு, பார் ஏலம் எடுத்தவங்க, 'கன்டிஷன்' போடுறாங்க பா...

''நொறுக்கு தீனி, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கொள்ளை லாபத்துல விற்கலாம் என்பதால், பார் உள்வாடகைக்கு எடுக்க, பலத்த போட்டி ஏற்பட்டு இருக்கு பா...'' என முடித்தார்,
அன்வர்பாய்.

''நகை அதிகமா போட்டுண்டு வந்தது, அமைச்சர் கண்ணை உறுத்திடுத்தாம் ஓய்...'' என அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.

''சுவாரசியமா இருக்கே... மேலே சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''வேலுார் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருப்பவர், தி.மு.க.,வை சேர்ந்த வேல்முருகன்... நகை பிரியரான இவர், எப்பவும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கழுத்துல போட்டுண்டு தான், நிகழ்ச்சிகள்ல
பங்கேற்பார் ஓய்...

''சில நாட்களுக்கு முன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற அரசு விழாவுல, நகைகள் ஜொலிஜொலிக்க வேல்முருகன் வந்தார்...

''அந்த நிகழ்ச்சியில அமைச்சர் பேசினதை யாருமே கேட்கலை... எல்லார் கண்ணும், வேல்முருகன் போட்டுண்டு இருந்த நகை மீதே இருந்துது...

''இதனால அமைச்சர் துரைமுருகன் கோபமாகிட்டார்... அப்பறம் என்ன... அடுத்த விழாலேர்ந்து, வேல்முருகன் கழுத்துலயும், கையிலயும் நகைகள் 'மிஸ்சிங்' ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''போலி நிருபர்களால், கிரானைட் அதிபர்கள் கதறுதாவ வே...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுத்து வட்டாரத்துல, கல்குவாரி மற்றும் கிரஷர் தொழில் நடக்கு.

''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதியில் இருக்குற சிலர், தங்களை 'நிருபர்'ன்னு சொல்லிக்கிட்டு, கழுத்துல அடையாள அட்டையை மாட்டிக்கிட்டு, 'டிப் - டாப்'பா உடையணிஞ்சு மாவட்டம் முழுவதும் உலா வர்றாவ...

''முன்னணி செய்தி 'டிவி'யின் நிருபர் என சொல்லிக்கிற இவங்க, கிரானைட் அதிபர்களை சந்திச்சு, 'முறையான உரிமமின்றி தொழில் செய்யுறீங்க... இதை செய்தியாக வெளியிடுவோம்'ன்னு மிரட்டி, பணம் பறிக்காவ வே...

''கிரானைட் அதிபர்களும், எதுக்கு வம்புன்னு, போலி நிருபர்களுக்கு பணத்தை கொடுத்துடுதாவ...''

''இப்படி போலி நிருபர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு... பூனைக்கு யாராச்சும் மணி கட்டினா நல்லது வே...'' என முடித்தார், அண்ணாச்சி. நண்பர்கள் கிளம்பினர்.

******************


முறைகேடு மூவேந்தரில் தப்பி பிழைத்த அதிகாரி!கருப்பட்டி காபியை ருசித்தபடியே, ''முன்னாள் கவுன்சிலர் அழிச்சாட்டியம் தாங்க முடியலைங்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''எந்தக் கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''சென்னை அடுத்த மறைமலை நகர்ல, விஜயகாந்த் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஒருத்தர் இருக்கார்... இவர், காட்டாங்குளத்துார் கிராமத்துல நன்செய் நிலங்களை வாங்கி, அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளாக பிரித்து
வித்திருக்கார் ஓய்...

''அதோட, பக்கத்துல இருந்த மேய்க்கால் இடங்கள் மற்றும் பூதேரி புறம்போக்கு இடங்களையும், வளைச்சு போட்டு வித்துட்டார்... மழை நேரங்கள்ல தண்ணீர் தேங்கறதால, பூதேரி கரையை உடைச்சு, பக்கத்துல இருக்கற அங்கீகரிக்கப்பட்ட மனைப் பகுதியில, 'மாஜி' கவுன்சிலர் விட்டிருக்கார் ஓய்...

''அங்கீகாரமற்ற மனை விற்பனையை, நகராட்சி நிர்வாகமும் கண்டுக்கலை... அதிகாரிகள் கூட அவருக்கு ஒத்தாசையா தான் இருக்கா... வர உள்ளாட்சி தேர்தல்ல, தன் ஆத்துக்காரியை நிறுத்த முடிவு பண்ணியிருக்காராம் ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.

''நேத்து கோகுல் வந்து, கல்யாண பத்திரிகை தந்துட்டு போனாருங்க...'' என்ற அந்தோணிசாமி, ''ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலரா இருந்தவர் ராஜ்குமார்... ஈரோடு கூட்டுறவு பால் ஒன்றியத்தின் தலைவராகவும் இருக்காருங்க...'' என, அடுத்த மேட்டருக்கு 'லீடு' தந்தார்.

''மேல சொல்லுங்க பா...'' என்றார்அன்வர்பாய்.

''இவர், போன 10ம் தேதி, அமைச்சர் முத்துசாமி முன்னிலையில, தி.மு.க.,வுல சேர்ந்துட்டாருங்க... எந்தக் கட்சி ஆட்சியில இருக்கோ, அதுல இருக்கணும்ங்கிறது இவரது பாலிசி...

''ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில இருந்தப்ப அங்கே இருந்தவர், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், அணி மாறிட்டாருங்க... கையோட தன் மனைவிக்கு மாநகராட்சி கவுன்சிலர் பதவி வாங்கினார்... 10 வருஷமா அ.தி.மு.க.,வுல இருந்தவர், இப்ப மறுபடியும் தி.மு.க.,வுக்கு வந்துட்டாருங்க... இப்படி மாறி மாறி தாவுற இவரது வருகையை, தி.மு.க.,வினரே ரசிக்கலைங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''மூவேந்தர்ல ஒருத்தர் மட்டும் இன்னும் கோலோச்சிட்டு இருக்காரு வே...'' என, கடைசி தகவலுக்கு வந்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''போன அ.தி.மு.க., ஆட்சியில, கோவை மாநகராட்சியில, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தியபோது, பொறியியல் பிரிவைச் சேர்ந்த மூணு அதிகாரிகள் வச்சது தான் சட்டமா இருந்துச்சு வே... இவங்களை 'மூவேந்தர்'னு அழைக்கிறது வழக்கம்...

''ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல முறைகேடுன்னு புகார் வந்ததும், நகர பொறியாளரையும், நிர்வாக பொறியாளரையும் பணியில இருந்தே விடுவிச்சாவ... இன்னும் வேற பணியிடம் ஒதுக்காம, சம்பளம் கூட வராம முடங்கி கிடக்காவ வே...

''அதே நேரம், இன்னொரு அதிகாரிக்கு மட்டும், இரண்டு மண்டலங்கள்ல அஞ்சு வார்டுகளுக்கு பொறுப்பு குடுத்திருக்காவ... இவர் மீது இதுவரைக்கும் துறை ரீதியா எந்த நடவடிக்கையும் எடுக்கலை... உயர் அதிகாரிகளும் கண்டுக்கலை வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

''பொங்கல் லீவுக்கு வந்த உம்ம பேரன் கமலக்கண்ணன், ஊருக்கு போயிட்டானா ஓய்...'' என, அண்ணாச்சியிடம் குப்பண்ணா கேட்க, அரட்டை திசை
மாறியது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X