ஜன., 16, 1978
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்துள்ள ராயலசெருவு கிராமத்தில், ராஜபுத்திர வம்சத்தில், 1924 அக்., 15ல் பிறந்தவர், ஏ.பீம்சிங். சினிமா மீதான ஆர்வத்தால், இயக்குனர்கள் கிருஷ்ணன், -பஞ்சு ஆகியோரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்; எடிட்டிங் துறையிலும் பயிற்சி பெற்றார்.
இவர் இயக்கிய அம்மையப்பன், ராஜா ராணி படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின. 1958ல், பதிபக்தி என்ற படத்தின் வெற்றி மூலம் பிரபலம் அடைந்தார். பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாவ மன்னிப்பு, பாச மலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார் என, 'ப' வரிசையில் ஏராளமான படங்களைஇயக்கினார்; அனைத்தும், வசூலில் சாதனை படைத்தன.ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களையும் இயக்கி உள்ளார். 'புத்தா பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி, பல படங்களையும் தயாரித்துள்ளார். 1978 ஜன., 16ம் தேதி, தன் 54 வயதில் காலமானார்.
இயக்குனர் ஏ.பீம்சிங் காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE