குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேர் அனுமதி | Dinamalar

குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேர் அனுமதி

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022
புதுடில்லி : கொரோனா பரவலால் டில்லியில் நடக்கவுள்ள குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு தின விழா ஆண்டு தோறும் ஜன., 26 அன்று டில்லியில் 1.25 லட்சம் பார்வையாளர் களுடன் நடக்கும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் பேர் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.அதேபோல் இந்தாண்டும் டில்லியில்
குடியரசு தின விழா,24 ஆயிரம் பேர், அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : கொரோனா பரவலால் டில்லியில் நடக்கவுள்ள குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடியரசு தின விழா ஆண்டு தோறும் ஜன., 26 அன்று டில்லியில் 1.25 லட்சம் பார்வையாளர் களுடன் நடக்கும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் பேர் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.அதேபோல் இந்தாண்டும் டில்லியில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.


latest tamil news



இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:இந்தாண்டு குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படும். இதில் 19 ஆயிரம் பேர் மத்திய அரசின் அழைப்பின் அடிப்படையில் பங்கேற்பர். பொதுமக்கள் 5,000 பேர் 'டிக்கெட்' பெற்று கலந்து கொள்வர். இந்தாண்டு வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை.

முன்னதாக உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களை அழைக்க திட்டமிடப்பட்டது. கொரோனா பரவலால் அது கைவிடப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


நேதாஜி பிறந்த நாள்

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா ஜன., 23ல் 'பராக்ரம் திவாஸ்' என கொண்டாடப்பட்டு வந்தது. அதேபோல் குடியரசு தின விழா கொண்டாட்டம் ஜன., 24ல் துவங்குவது வழக்கம். நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தை நினைவுபடுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதையடுத்து நடப்பு ஆண்டு முதல், நேதாஜி பிறந்த நாளில் இருந்து குடியரசு தின விழா கொண்டாட்டங்களை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X