கோவை;மாவட்ட அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில், ராஜலட்சுமி மில்ஸ் முன்னாள் மாணவர்கள் அணி கோப்பையை வென்றது.'டெக்சிட்டி ஸ்போர்ட்ஸ் கிளப்' சார்பில், 15ம் ஆண்டு தேவராஜூலு நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள, மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடந்தது.'நாக் அவுட்' முறையில் நடத்தப்பட்ட போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 32 அணிகள் பங்கேற்றன.முதல் அரையிறுதி போட்டியில், ஜெயபாரதி அணி, 79 - 71 என்ற புள்ளிக்கணக்கில் 'யுனைடெட்' அணியையும்; இரண்டாம் அரையிறுதிப் போட்டியில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., அணி, 93 - 78 என்ற புள்ளி அடிப்படையில் ஒய்.எம்.சி.ஏ., அணியையும் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.இறுதிப் போட்டியில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., அணிக்காக ஆதர்ஷ், 25 புள்ளிகள் எடுக்க, 91 - 73 என்ற புள்ளிக்கணக்கில் ஜெயபாரதி அணியை வீழ்த்தி, 18 புள்ளிகள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டியை வென்று, கோப்பையை தட்டிச் சென்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. சுகுணா குழுமத்தின் தலைவர் லட்சுமி நாராயணசாமி பரிசுகளை வழங்கினார்.கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் மற்றும் டெக்சிட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் கோவிந்தராஜூலு ஆகியோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE