கோவை:மாணவர்களுக்கான தொடர் யோகா போட்டி, கோவைப்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்கிறது.இந்திய கல்வித்துறை ஆணைப்படி, 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில், 75 கோடி 'சூரிய நமஸ்காரம்' செய்ய, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், ஜன.,12ம் தேதி முதல், பிப்., 8 வரை மாணவர்களுக்கான யோகா போட்டி இணைய வழியில் நடக்கிறது. இதில் மாணவர்கள் தொடர்ந்து தினமும், 13 முறை, 21 நாட்கள் சூரிய நமஸ்காரம் செய்கின்றனர்.ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 55 பேர் இதில் பங்கேற்றனர். 21 நாட்கள் முடிவில், இதில் பங்கேற்றவர்களுக்கு இந்திய கல்வித்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.