கள்ளக்குறிச்சி: மாடுகளுக்கு அலங்கார பொருட்கள் வாங்குவதற்கு கள்ளக்குறிச்சி கடைவீதிகளில் விவசாயிகள், பொதுமக்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் பசு, காளை உள்ளிட்ட மாடுகளை குளிப்பாட்டி, சுத்தம் செய்தும், மாடுகளின் கொம்புகளை சீவி பெயிண்ட் அடித்து, அலங்கார கயிறு உள்ளிட்ட பொருட்களை வாங்கி அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபடுவர்.
கள்ளக்குறிச்சி கடைவீதியில் நேற்று குவிந்தனர். இதனையொட்டி மந்தைவெளி, அண்ணாநகர், சேலம் சாலை, துருகம் சாலை போன்ற பகுதிகளில் மாடுகளுக்குத் தேவையான கயிறு, மணி, பெயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்தது. இதனால், நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.