சங்கராபுரம்: கொரோனா பரவல் காரணமாக சங்கராபுரத்தில் நாளை 16ம் தேதி நடக்க இருந்த ஆற்றுத் திருவிழா நடந்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
சங்கராபுரத்தில் ஆண்டுதோறும் தை 3ம் தேதி சங்கராபுரம் மணி நதியில் ஆற்றுத் திருவிழா நடப்பது வழக்கம். விநாயகர், சுப்ரமணியர், கெங்கையம்மன், பாண்டலம் பாண்டுவனேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு திர்த்தவாரி நடைபெறும்.சங்கராபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஆற்றுத் திருவிழாவில் பங்கேற்பர். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளை 16ம் தேதி நடைபெற இருந்த ஆற்றுத் திருவிழா நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.