சுலபமா லாபம் சம்பாதிக்க...
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி காந்தி: என் வயது, ௬௨. சின்ன வயதில் இருந்தே மீன் வளர்ப்புன்னாலே ஓர் ஆர்வம்.சும்மா இருக்கிற நேரங்களில் ஏரிகள், கிணறுகளில் மீன் பிடிப்பேன். அப்புறம் அப்படியே படிச்சு வேலைக்கு போயிட்டேன்.
வேலை செய்யும் போதே, ௨ ஏக்கர் நிலத்தை வாங்கினேன். விவசாயம் செய்தபடி, கூடுதல் வருமானத்துக்கு மீன் வளர்ப்புல இறங்கலாம்ன்னு முடிவு செய்து, ௨௦௧௨ம் வருஷம் இறங்கினேன்.
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் பொறியியல் துறை வாயிலாக மானியத்துல இலவசமாகவே மீன் குட்டையை அமைத்தேன்.
அவர்களே மானியத்துல மீன் குஞ்சுகளை வாங்கி கொடுத்தனர். குளத்தில் விட்ட சிறிது நாட்களிலேயே மீன்களின் செதில்களில் புழு விழுந்திடுச்சு.
மீன் வளர்ப்புக்கு ஆர்வம், பயிற்சி மட்டும் இருந்தால் போதாது; அனுபவம் இருந்தா தான் ஜெயிக்க முடியும் என புரிந்தது. அதன்பின் ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்தேன். எங்கே தப்பு நடக்குது, ஏன் நடக்குது என யோசித்து, சரி செய்தேன்.
வாங்கிட்டு வர்ற மீன் குஞ்சுகளை , நாற்றங்கால் மீன் குளத்தில், 40 நாட்கள் வளர்த்து தான் பெரிய மீன் குளத்தில் விடுவேன்.
கோதுமை தவிடு, அரிசி மாவு, வீணான காய்கறிகள், மீன் தீவனம் போன்றவற்றை உணவா தர்றேன். தண்ணியோட நிறத்தை பச்சை நிறத்தில் பராமரிக்கணும்..
குளத்தில் விட்ட 4 மாதத்தில் ஒரு மீன் 300 - 500 கிராம் அளவுக்கு வளர்ந்திடும்.குளத்தில், ௨,௦௦௦ - ௨,௨௦௦ குஞ்சுகளை விடுவேன். இந்த அளவு அதிகம் தான். ஆனால், அதற்கேற்ற மாதிரி தீவனம், பராமரிப்பு, ஆக்சிஜன் அளவை பராமரித்து வருகிறேன்.
தவளை, பாம்பு சாப்பிட்டது போக, ௨,௦௦௦ குஞ்சுகள் விற்பனைக்கு தேறும். மொத்தம் ௧௧௫ நாட்களில் இருந்து மீன் அறுவடை ஆரம்பிக்கும். அப்படி
ஆண்டுக்கு மூணு அறுவடை.
வாரம் ஒருமுறை 200 கிலோ வீதம் 4 வாரங்களுக்கு 800 கிலோ மீன் கிடைக்கும். 1 கிலோ மீன் 150- 200 ரூபாய்க்கு விலை போகும். குறைந்தபட்சம் ௧௫௦ ரூபாய் என வைத்தாலும், ௧
லட்சத்து, ௨௦ ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு, 55 ஆயிரம் ரூபாய் போக, ஒரு அறுவடைக்கு ௬௫ ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆண்டுக்கு இது மாதிரி ௩ அறுவடை எடுப்போம்.
புதிதாக மீன் வளர்ப்பில் இறங்குபவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகள் கஷ்டமாக தான் இருக்கும். பழகிடுச்சுன்னா, ரொம்ப சுலபமா லாபம் சம்பாதிக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE