வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை மீண்டும் துவங்கி உள்ளது.
திருமலையில் அதிகாலையில் சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்பும் சேவை தினசரி நடந்து வருகிறது.
ஆனால் மார்கழி மாதம் மட்டும் சுப்ரபாதத்திற்கு பதிலாக ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்படுகின்றன.இதன்படி டிச., 15ம் தேதி முதல், திருமலையில் மார்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன.
![]()
|
ஜன., 14ம் தேதியுடன் மார்கழி மாதம் நிறைவு பெற்றதை ஒட்டி கோதா கல்யாண நிகழ்ச்சியுடன் திருப்பாவைபாசுர பாராயணம் முடிவடைந்தது.இதை தொடர்ந்து மீண்டும் சுப்ரபாத சேவை துவங்கப்பட்டது.